தூக்கம் வராமல் தவிப்போருக்கு மருந்து.

தூக்கம் வராமல் தவிப்போருக்கு மருந்து.



மருத்துவ குணம் அதிகம் நிரம்பிய அக்ரூட் வகை மரங்கள் சிக்கிம், நேபாளம் போன்ற ஹிமாலய பகுதிகளில் மட்டுமே வளர்கின்றன. இந்த மரத்தில் கிடைக்கும் கொட்டைகளே ‘’வால்நட்’’ எனப்படுகிறது. ருசியான இந்த வால்நட் கொட்டைகள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. வால்நட்டில் உள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம் ஆண்களின் உயிரணுக்களை பெருக்கி, விருத்தியடைய செய்கிறது.

மேலும், ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் தன்மை கொண்டவை. ‘’டிமென்ஷியா’’ என்ற ஞாபக சக்தி குறைவு நோயை வரவிடாமல் தடுக்கிறது. இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து, நல்ல கொழுப்பை அளிக்கிறது.

இதை, பாலில் கொதிக்க வைத்து அருந்தினால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது. மூளையின் அமைப்பை கொண்டுள்ள இந்த பருப்பு, உண்மையில் மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது. ஊளைச்சதை போடவிடாமல் தடுக்கிறது.

இளைஞர்களுக்கு, குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அழகான கட்டுடலை தரும் ஆற்றல் கொண்டது. தோலுக்கு மினுமினுப்பை தந்து சொறி, சிரங்கு, படை போன்றவற்றை குணமாக்குகிறது. தினம் 10 பருப்புகளை சாப்பிடுவது நல்லது.

Post a Comment

0 Comments